மன்னார் பாலத்தில் கழுதைகளின் நடமாட்டத்தால் அசௌகரியம்!

மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டத்தால் அசௌகரியம்!

மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகனங்களில் பயணிப்பவர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

குறித்த கழுதைகள் பிரதான பாலத்தில் இரவு, பகல் என நாள் முழுவதும் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன.

இதன்போது மோட்டார்சைக்கிள் மற்றும் ஏனைய வாகனங்களில் மன்னாருக்கு வருபவர்களும், மன்னாரில் இருந்து பிரதான பாலத்தினூடாக வேறு இடங்களுக்கு செல்பவர்களும் விபத்துகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பிரதான பாலத்தை சுற்றி திரிகின்ற கழுதைகளை பிடித்து வேறு இடங்களில் விட உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை மன்னார் நகர் பகுதியில் மக்களுக்கு இடையூராக, விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் நடமாடிய சுமார் 70 இற்கும் மேற்பட்ட கழுதைகளை மன்னார் நகர சபையினர் மாற்று இடமொன்றிற்கு கொண்டு சென்று விட்டுள்ளனர்.

இதனால் மன்னார் நகர் பகுதியில் கழுதைகளின் பிரச்சினைகள் குறைவடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Copyright © 7635 Mukadu · All rights reserved · designed by Speed IT net