அரசாங்கக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் லசந்த நியமனம்

அரசாங்கக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் லசந்த நியமனம்

நாடாளுமன்றத்திலுள்ள நிதிசார் குழுக்களில் ஒன்றான அரசாங்கக் கணக்குக் குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கக் கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (புதன்கிழமை) கூடியது. இதன்போது லசந்த அழகியவன்ன தலைவர் பதவிக்கு போட்டியின்றி நியமிக்கப்பட்டார்.

தலைவர் பதவிக்கான முன்மொழிவு ஐக்கிய தேசிய கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், அதற்கு ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவளித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதற்கு முன்னரும் அரசாங்கக் கணக்குக் குழுவின் தலைவராக லசந்த அழகியவன்ன செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net