எதிர்வரும் சில தினங்களுக்கு கொழும்பின் முக்கிய இடங்களுக்கு பூட்டு
எதிர்வரும் சில தினங்களுக்கு கொள்ளுப்பிட்டிய சந்தி முதல் காலி முகத்திடல் லோட்டஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதிகள் மூடப்படவுள்ளன.
அதன்படி 26,27,31,1,2, மற்றும் 3ஆம் திகதிகளில் குறித்த வீதிகள் மூடப்படவுள்ளன.
இலங்கையின் 71ஆவது சுதந்திரதினம் எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
சுதந்திரதின நிகழ்வுகள் காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே இடம்பெறும். இதன்காரணமாக சுதந்திரதின ஒத்திகைக்காக குறித்த வீதிகளை மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.