படைப்புழுவின் உண்மைத்தன்மையை மறைக்க அரசாங்கம் முயற்சி!
விவசாயத்துறையில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சேனா படைப்புழு தொடர்பான உண்மைத் தன்மையை அரசாங்கம் மறைப்பதற்கு முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வில் விவசாய அமைச்சரின் உரைக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
”படைப்புழுக்கள் பருவப்பெயர்ச்சி மூலம் இலங்கைக்கு வந்துள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த புழுவின் ஆயுட்காலம் 7 நாட்கள் என்று கூறுகின்றீர்கள். பருவ பெயர்ச்சி என்றால் நீண்ட தூரம் அப்புழுக்களுக்கு பறந்து வர முடியுமா? இந்த படைப்புழுக்கள் விதைகளின் ஊடாக வந்ததை மறைக்கவே இவ்வாறு கூறுகின்றார்கள்.
படைப்புழு பரவலினால் பகுதியளவில், முழுமையாக என இரு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, முழுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரமின்றி பகுதியளவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் காப்புறுதி வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.