சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 11.00 மணியளவில் ஜனாதிபதி சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
சிங்கப்பூரில் நடைபெற உள்ள ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியுடன், 10 பேர் கொண்ட குழுவொன்றும் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளது.
ஜனாதிபதியும் குழுவினரும் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கை திரும்ப உள்ளனர்.