ஐரோப்பாவின் மிகப்பெரிய சிறைச்சாலைக்கு 50 வயது!
ஐரோப்பாவின் மிகப்பெரிய சிறைச்சாலை எது தெரியுமா? பிரான்சின் Essonne இல் உள்ள Fleury-Mérogis சிறைச்சலை தான். இச்சிறைச்சலை தற்போது தனது 50 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.
ஐம்பது வருடங்களுக்கு முன்னர் 1969 ஆம் ஆண்டில் இந்தச் சிறைச்சாலை திறக்கப்பட்டபோது பல்வேறு விதமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் இது பெற்றது.
கொள்ளையர்கள், பயங்கரவாதிகள் என வில்லாதி வில்லன்களை எல்லாம் கம்பி எண்ண வைத்த பெருமை இந்தச் சிறைச்சாலைக்கு உண்டு.
தற்போது இச்சிறைச்சாலையில் ஒரு சில பகுதிகள் சிதைவடைந்து காணப்பட்டாலும், கைதிகளுக்கு பஞ்சம் இல்லை. அதுவே தற்போது பெரும் பிரச்சனையாகவும் உள்ளது.
தற்போது இங்கு 4,200 சிறைக்கைதிகள் உள்ளனர். இது சிறைச்சாலை இடவசதியை விட 43 வீதம் அதிகமாகும். ஒரு அறைக்குள் இரண்டில் இருந்து மூன்று வரையான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 21, 1969 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தச் சிறைச்சாலைக்கு கடந்த திங்கட்கிழமை ஐம்பதாவது ஆண்டாகும்.