சேவையை ஆரம்பிக்கவுள்ளது உத்தரதேவி!

சேவையை ஆரம்பிக்கவுள்ளது உத்தரதேவி!

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள இரட்டை வலுகொண்ட ரயில் சேவை கொழும்பு முதல் காங்கேசன்துறைவரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் உத்தரதேவி என்ற பெயரில் இந்த ரயில், சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

குறித்த ரயிலின் பரீட்சார்த்தப் பயணம் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 6 மணிக்கு போக்குவரத்து அமைச்சரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதையடுத்து, எதிர்வரும் 30ஆம் திகதி முதல் குறித்த ரயில் சேவை, முற்பகல் 10.45மணிக்கு கொழும்பிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கவுள்ளது.

இதேவேளை, எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்து இரட்டை வலுகொண்ட 5 ரயில் தொகுதிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன், சீனாவிலிருந்தும் ரயில் தொகுதிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக, ரயில் திணைக்கள முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net