ஜனாதிபதி படுகொலைச் சதித்திட்டம் – நாமலிடம் விசாரணை!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம், விசாரணைகள் இடம்பெற்றுள்ளன
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (புதன்கிழமை) குறித்த விசாரணைகளை நீண்ட நேரம் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சதித் திட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தியர் வழங்கி தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகள் சுதந்திரமான முறையில் இடம்பெறும் என நம்புவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.