வலம்புரி சங்குடன் நால்வர் கைது!
வலம்புரி சங்குடன் திருகோணமலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து வலம்புரி சங்குடன் நேற்றிரவு எட்டு முப்பது மணி அளவில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 4 பேரையும் உப்புவெளி பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் 4 பேரும் திருகோணமலை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.