மைத்திரி – ரணில் குறித்து சம்பந்தன வெளியிட்டுள்ள கவலை!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இணைந்து நிறைவேற்ற வேண்டும் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்துவதில் பெரும்பான்மை கட்சிகள் அக்கரையின்றி காணப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலிய நாட்டு தூதுவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று சந்தித்து முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டிருந்தார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
“மக்களிடம் அதிகாரங்களை பகிர்ந்துகொடுப்பதற்கு அரசியல்வாதிகள் பயப்படுகின்றனர். குறிப்பாக புதிய அரசியல் யாப்பு குறித்து பிரதான கட்சிகள் காட்டும் அக்கரை போதுமானதாக இல்லை.
புதிய அரசியல் அமைப்பு குறித்து பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தும் விடயத்தில் இரண்டு பெருன்பான்மை கட்சிகளும் அக்கறையின்றி செயற்படுகின்றன.
இந்நிலையில், ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இணைந்து நிறைவேற்ற வேண்டும்” என இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.