யாழில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்

யாழில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் இந்த போராட்டம், நாளை (சனிக்கிழமை) 10.00 மணிக்கு யாழிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்றலில் இடம்பெறவுள்ளது.

கிழக்கு ஊடக அமையம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு, தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி ஊடகவியலாளர் அமைப்புக்களும் ஒன்றினைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

ஊடகப்படுகொலைக்கான நீதி கோரும் இப்போராட்டத்தில் அனைவரையும் திரண்டு நீதிக்காக குரல் கொடுக்க ஊடக அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

ஊடகவியலாளர் சுகிர்தராஜன் திருகோணமலையில் கடந்த 2006ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net