கேகாலையில் மின்சார பட்டியலைப் பார்த்து உரிமையாளர் அதிர்ச்சி!
கேகாலையில் வீடு ஒன்றுக்கு வழங்கப்பட்ட மின்சார பட்டியலைப் பார்த்து அதன் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மாவனெல்ல பதுரியா பாடசலை மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு 81895.95 ரூபா பெறுமதியான மின்சார பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்து வீட்டிற்கு ஏனைய மாதங்களில் 90 மற்றும் 100 ரூபாய் அளவிலான மின்சார பட்டியல் கிடைப்பதாகவும், வீட்டில் 3 அறைகளே உள்ளதாகவும் வீட்டு உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் மாவனெல்ல நகரத்தில் உள்ள வர்த்தக நிலையத்தில் சாதாரன ஊழியராக பணியாற்றுகிறார்.
இவ்வளவு பெரிய தொகையை மின்சார கட்டணமாக செலுத்த முடியாது எனவும், இந்தளவிற்கு மின்சார கட்டணம் அதிகரிப்பதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டிலுள்ள மின்சார பெட்டிக்கு அருகில் மின்சார தூண் ஒன்று உள்ளதாகவும் இதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.