வல்வெட்டித்துறையில் சுமார் 110 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகளை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர்
“சந்தேகநபர்கள் மூவரும் கஞ்சா போதைப்பொருளை வேறு இடத்துக்குக் கடத்த முற்பட்ட போதே கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. விசாரணைகளின் பின்னரே மேலதிக விவரம் தெரியவரும்” என்றும் பொலிஸார் கூறினர்.