யானையின் தாக்குதலினால் அவதியுறும் மக்கள்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் யானையின் தாக்குதல்களினால் வீடுகள் சேதமடைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் தாந்தாமலை பகுதியில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக யானையின் தாக்குதலுக்குள்ளாகிவருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
இப்பகுதியில் கச்சான், சோளன், நெற்செய்கையில் ஈடுபடும் மக்களே அதிகளவான நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் யானையின் தாக்குதல்கள் காரணமாக உடமைகளை மட்டுமன்றி உயிர்களையும் இழக்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, வாக்கு வாங்குவதற்கு மட்டும் முண்டியடித்துக்கொண்டுவரும் அரசியல்வாதிகள் பிரச்சினை ஏற்படும்போது பாராமுகமாக இருப்பதாக தாந்தாமலை பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.