வீடமைப்புத் திட்டங்களை சீர்குலைக்க சதி!

மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது, சிலர் அதனை சீர்குலைப்பதற்கான சதியில் ஈடுபடுவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இங்கிரிய, நிமலகம பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மாதிரிக் கிராமத்தைதிறந்து வைத்து உரையாற்றியபோதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“மாதிரிக் கிராமங்களை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக கூறி மக்கள் மத்தியில் போலியான வதந்திகள் பரப்பப்படுகின்றன.
எனினும், இதற்காக ஒதுக்கப்படுகின்ற நிதியில், பல இலட்சம் ரூபா பெறுமதியான இடங்களை மக்களுக்கு இலவசமாக பெற்றுக் கொடுப்பதுடன், முழுமையான வீடுகளை அமைத்து, சுத்தமான குடிநீர் வசதியும் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.
அத்துடன், மின்சாரம், வீதிப் புனரமைப்பு உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.