இந்து குருமார் ஒன்றியம் மக்களின் சேவையின் அங்கமாக விரைவில் உருவாகும்!
சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியத்தின் யாழ் அந்தண சிவாச்சாரியர்கள் உடன், (26) அன்று கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள சுதந்திரக்கட்சி மாவட்ட தலைமை காரியாலயத்தில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமாநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் சதாசிவம் இராமநாதன் அவர்கள் இணைந்திருந்தார்.
இந்துமத ஒன்றியத்தின் தலைவர் ஜெகதீஸ்வர குருக்கள், செயலாளர் சிவகடாற்சசர்மா குகேந்திர சர்மா குருக்கள் மக்களின் சமூக நலன்கருதிய கலந்துரையாடலில் ஈட்டுபட்டிருந்தனர்.
நிகழ்கால, மற்றும் எதிர்கால மக்கள் நலன்கருதிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சிறந்த கட்டமைப்புக்களை உருவாக்கிக்கொள்ள தமது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக உள்ளதாக இந்துமத ஒன்றியத்தின் சிவாச்சாரியர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆன்மிக வழியில் மக்கள் மனங்களில் நல்லெண்ணங்களை உருவாக்கி கொள்ள வேண்டும்.
நிகழ்காலத்தில் அதன் தாற்பரியம் அறியாமல் கலாச்சார, சம்பிரதாயங்களை புறக்கணிக்கும் நிலைமை எண்ணிக்கை அளவில் காணப்படுவதாகவும், எதிர்காலத்தில் அவற்றை சீராக்கி கொள்ள முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இரமாநாதன் அவர்களின் ஒத்துழைப்போடு,செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அவற்றை சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியத்தின் கோரிக்கையாக முன்வைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
ஆன்மீக செயற்பாடுகளுக்காக பல்வேறு தேசங்களில் இருந்தும் கிராமத்தை நோக்கி வருபவர்கள் அதிகம் காணப்படுகின்றார்கள். சிறந்ததொரு இயற்கையோடு இணைந்த நிலையத்தை தெரிவு செய்து படிமுறையான நடவடிக்கைகள் மூலம் சிறந்த சேவைகளை அவ் நிலையம் ஊடாக முன்னெடுக்கலாம்.
அதற்கான குருமார்களின் ஒத்துழைப்போடு எமது சேவையும் நிற்சயம் பெற்று தரப்படும். என பிரத்தியேக செயலாளரும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உறுப்பினருமான சதாசிவம் இராமநாதன் அவர்கள் சிவாச்சாரியார்களிடம் தெரிவித்திருந்தார்.