கிளிநொச்சியில் இந்தோனேசிய தூதுவருடன் வர்த்தக சமூக பிரதிநிதிகள் சந்திப்பு
கிளிநொச்சி வணிக வேளான் கைத் தொழில் ஒன்றிய பிரதிநிதிகள் இந்தோனேசிய தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கிளிநொச்சியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இச் சந்திப்பு இன்று (28-01-2019) காலை பத்து மணிக்குஇடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சவால்கள், உள்ளிட்டவற்றை கேட்டறிந்துகொண்ட இந்தோனேசிய தூதுவர் ஐ குஸ்தி நகுருக் ஆர்தியச அவர்கள் இந்தோனேசியா இந்த வர்த்தகர்களுடன் பரஸ்பர வணிக தொடர்புகளை மேற்கொள்வது பற்றியும், வணிகம் தொடர்பான பயிற்சிகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு,ஒக்ரோபர் மாதம் இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கிளிநொச்சியில் இருந்த கலந்துகொள்ள விரும்பம் உள்ள வர்த்தகர்கள் சிலருக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்
இதேவேளை தங்களின் வணிக வேளான் கைத் தொழில் ஒன்றியத்திற்கு ஒரு கட்டடம் ஒன்றை அமைத்து தருமாறு ஒன்றிய பிரதிநிதிகள் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.
இச்சந்திப்பில் வணிக வேளான் கைத் தொழில் ஒன்றியத்தின் தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் மற்றும் இந்தோனேசிய தூதரக அதிபாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்