சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க திறன் வகுப்பறை.
யாழ் நெல்லியடி மெதடிஸ் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திறன் வகுப்பறை திறப்பு விழா நேற்று(27) காலை நடைபெற்றிருந்தது.
பாடசாலை அதிபர் நடராசா தேவராஜா தலைமையில் இடம்பெற்றிருந்த நிகழ்வில்,முன்னாள் விவசாய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறன் வகுப்பறையை திறந்து வைத்து பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.
இவ் செயல்திட்டத்திற்காக 5 லட்சம் ரூபா நிதி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் ஒளிமயமான மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக விசேட நிதி ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் யோகசாமி ரவீந்திரன், கரவெட்டி பிரதேச செயலாளர் ஈஸ்வரானந்தன் தயாரூபன், திட்டமிடல் பணிப்பாளர் ரகுநாதன் ரஞ்சினி, ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக ஓய்வு நிலை அதிபர் கணேசமூர்த்தி, வளவாளர் கனகசபாபதி சத்தியசீலன், கடற்தொழில் நீரியல் வள ஓய்வு நிலை பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி, பரமானந்த ஆச்சிரம நிர்வாக உத்தியோகத்தர் கிருஷ்ணபிள்ளை கிருஷ்ணராஜ், ஓய்வு நிலை ஆசிரியர் காந்தன் செல்லத்துரை, பருத்தித்துறை மற்றும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் ,
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் இளைஞர் அணி செயற்பாட்டாளர்கள், தொகுதிகாரியாலய இணைப்பாளர்கள்,ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், ஆசிரியர்கள், மாணவர்கள், என பெருமளவிலானோர் திறன் வகுப்பறை திறப்பு விழா நிகழ்வில் இணைந்திருந்தனர்.