தமிழர்களின் மனதில் நீங்கா வடுவை ஏற்படுத்தியுள்ள ஈழ ஆதரவாளரின் மறைவு
இந்தியா – சென்னை பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் காலமானார்.
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஜான் ஜோசப் பெர்னாண்டஸ் மற்றும் ஆலிஸ் மார்த்தாவின் மகனாக 1930ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் திகதி பிறந்தார்.
இவர் 1977ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை ஒன்பது ஆண்டுகள் இந்நிய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளதுடன், கர்நாடக மாநிலத்தில் மத குருவாகவும் சேவை செய்துள்ளார்.
தொழிலாளர்களுக்கு ஆதரவாக சங்கம் அமைத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட இவர், 1975ஆம் ஆண்டு இந்திராகாந்தி அவசர நிலையை பிரகடனப்படுத்திய போது அதனை எதிர்த்தும் போராடியுள்ளார்.
எதிர் கட்சிகளின் ஆட்சி நடந்த மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் குஜராத் போன்ற இடங்களில் தலைமறைவாக செயல்பட்டு அரசுக்கு எதிராக குரல் கொடுத்து எமர்ஜென்சியின் நாயகன் என்ற பெயருக்கு சொந்தக்காரரானார்.
1976ஆம் ஆண்டு கொல்கத்தாவில் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் இருந்தபடி தேர்தலில் பிஹார் மாநிலத்தின் முசாபூர் தொகுதியில் போட்டியிட்டு 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்று கொண்டார்.
இதேவேளை ஈழ விடுதலைப்புலிகளுக்கு இவரது வீடு, புகலிடம் கொடுத்ததோடு 1983ஆம் ஆண்டில் இந்திய அமைதி படை, இலங்கையில் தமிழர் பகுதியில் நடத்திய படுகொலைகளை புகைப்பட ஆதாரங்களுடன் நூலாக வெளியிட்டார்.
ஈழ ஆதரவாளரான இவர் தமிழர்களின் நன்மதிப்பை பெற்றவராக திகழ்ந்து வரும் நிலையில், இவரின் இழப்பு தமிழர்களின் மனதை பெருமளவு பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.