பிரேசில் அனர்த்தம்: உயிரிழப்பு 84ஐ எட்டியது!
தென்கிழக்கு பிரேசிலின் புருமடின்ஹோ பகுதியிலுள்ள அணை உடைப்பெடுத்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளது.
இன்னும் 276 பேர் காணாமல் போயுள்ள நிலையில், மீட்புப் பணிகள் இரவு பகலாக முன்னெடுக்கப்படடு வருகின்றன.
உலகின் மிகப்பெரிய இரும்பு மற்றும் தாது சுரங்கத்தை நடத்திவரும் Vale என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த அணை கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை உடைப்பெடுத்தது.
இதனால் ஏற்பட்ட வெள்ளம் பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டதோடு, பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதே நிறுவனத்திற்குச் சொந்தமான அணை கடந்த 2015ஆம் ஆண்டு உடைப்பெடுத்ததில் 19 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் இவ்வாறான பாரிய அனர்த்தமொன்று ஏற்பட்டுள்ளமை, கடும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.