யாழில் கால்வலிக்க நிறுத்தப்பட்டனர் அரச உத்தியோகஸ்தர்கள்!

யாழில் கால்வலிக்க நிறுத்தப்பட்டனர் அரச உத்தியோகஸ்தர்கள்!

யாழில் உள்ள அதிகாரம் மிக்க அரச அலுவலகம் ஒன்றில் சீற்றூழியர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் உத்தியோகஸ்தர்கள் மூவரை வெய்யிலில் நிறுத்தி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் மேலிடத்திற்கு முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாக தெரிய வருகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்,

குறித்த அதிகாரம் மிக்க அலுவலகத்தில் பணிபுரியும் 3 பெண் உத்தியோகத்தர்கள் கடந்த வெள்ளிக்கிழமை காலை அலுவலகத்தில் குறித்த வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த விடயம் உயர்பீடத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 3 உத்தியோகத்தர்களையும் நிர்வாக பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் அலுவலக நேரமான காலை 8 மணி தொடக்கம் 4 மணி வரை எழுந்து நிற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணிவரை குறித்த உத்தியோகத்தர்கள் தண்டனை அனுபவித்துள்ளனர்.

அதே போன்று திங்கட்கிழமையும் செவ்வாய் கிழமையும் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை எழுத்து நின்று தண்டனை அனுபவித்துள்ளனர்.

இதுவரை எந்தவிதமான பதிலும் வராத நிலையில் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் மேலிடத்திற்கு இது குறித்து முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிய வருகிறது.

குறித்த தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவர் ஆறு மாத குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 3545 Mukadu · All rights reserved · designed by Speed IT net