கிண்ணியா விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய கள விஜயம்.
திருகோணமலை – கிண்ணியா விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக அரச உயரதிகாரிகளுடன் கள விஜயம் ஒன்றை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் மேற்கொண்டுள்ளார்.
இன்றைய தினம் மேற்கொண்ட விஜயத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் விவசாய சங்கங்களுடன் இணைந்து பிரதியமைச்சர் ஆராய்ந்துள்ளார்.
கிண்ணியா பீங்கான் உடஞ்சாரு, புளியடிக்குடா, வன்னியனார் மடு, பக்கிரான் வெட்டை, கூலடி வெட்டை போன்ற விவசாய நிலங்களில் ஹாடி அமைப்பதனால் பல விவசாய செய்கைகளை மேற்கொள்ள முடியும் என விவசாய சம்மேளன உறுப்பினர்கள் பிரதியமைச்சரிடத்தில் தெரிவித்தனர்.
தனது நிதி ஒதுக்கீட்டில் உடனடியாக ஐந்து ரெகுலோட்டர்களையும் செய்து தருவதாக பிரதியமைச்சர் விவசாய சங்கங்களிடம் தெரிவித்தார்.
இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் துரிதமாக செயற்படுமாறும் திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் ஏ.எல்.ஜௌபருக்கு பணிப்புரை வழங்கினார்.
இக்கள விஜயத்தில் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி, மாவட்ட நீர்ப்பாசன பணிமனையின் பணிப்பாளர் ஏ.எல்.ஜௌபர், தொழில் நுட்ப உதவியாளர் சிராஜ் உட்பட விவசாய சங்கங்களின் உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர்.