ஐ.நா நிபுணர் இலங்கை வருகிறார்!
பாலியல் நோக்கு நிலை மற்றும் பால்நிலை அடையாளத்தின் அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான, ஐ.நாவின் நிபுணரான விக்டர் மட்ரிகன் பொர்லோஸ் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
உண்மை கண்டறியும் பயணம் ஒன்றை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளுமாறு இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பயணத்துக்கான நாளை உறுதிப்படுத்தும் பணிகளுக்காக காத்திருப்பதாகவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின், சிறப்பு நடைமுறைகள் பிரிவின் உதவி மனிதஉரிமைகள் அதிகாரி அலிஸ் ஒசென்பெய்ன் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் சிறப்பு நிபுணர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, அரச மற்றும், சிவில் சமூக பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்துவார்.
அத்துடன், பாலியல் நோக்கு நிலை மற்றும் பால்நிலை அடிப்படையிலான சமத்துவ நிலை, பாகுபாடுகள், வன்முறைகள் தொடர்பான நிலையையும் அறிந்து கொள்ளவுள்ளார்.