வரவு – செலவுத்திட்டத்திற்கு 4,45000 கோடி ரூபா ஒதுக்கீடு!
2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடாக 4,45000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இதில் 2,16000 கோடி ரூபாவை கடனாக பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த பிரேரணையை சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இன்று சமர்ப்பித்தார்.
அத்துடன் இக்குறை நிரப்பியில் ஜனாதிபதிக்கு 1, 355 கோடியே 7180000 ரூபாவும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு 18384 கோடியே 5358000 ரூபாவும் பாதுகாப்பு அமைச்சுக்கு 39306 கோடியே 9030000 ரூபாவும் பிரதமரின் அமைச்சான தேசிய கொள்கைகள்,பொருளாதார அலுவல்கள் , மீள் குடியேற்றம்,புனர்வாழ்வளிப்பு,வடமாகாண அபிவிருத்தி,வாழ்க்கை தொழிற்பயிற்சி,திறன் அபிவிருத்தி,மற்றும் இளைஞர் அபிவிருத்தி அமைச்சுக்கு 9830 கோடியே 9652000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார அமைச்சுக்கு 18748 கோடியே 2398000 ரூபாவும் வீடமைப்பு ,நிர்மாணத்துறை, மற்றும் கலாசார அமைச்சுக்கு 1663 கோடியே 1300000 ரூபாவும் கல்வி அமைச்சுக்கு 10500 கோடி ரூபாவும் மலை நாட்டு புதிய கிராமங்கள்,உட்கட்டமைப்பு வசதிகள்,மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சுக்கு 388 கோடியே 3000000ரூபாவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கு 856 கோடியே 2000000 ரூபாவும் கைத்தொழில் வாணிப ,நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கு 289 கோடியே 4900000 ரூபாவும் உள்ளக, உள்நாட்டு அலுவல்கள் ,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராச்சி அமைச்சுக்கு 29239 கோடியே 6005000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.மிகுதி ஏனைய அமைச்சுக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.