நாடாளுமன்றத்திற்கு வேலுடன் சென்ற தோட்ட தொழிலாளி!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி விநோதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
1000 ரூபாய் அடிப்படை சம்பள உயர்வு கோரி அக்கரப்பத்தனையைச் சேர்ந்த சுப்பையா சத்தியேந்திரா (செவ்வாய்கிழமை) நாடாளுமன்ற வளாகத்திற்குச் சென்றிருந்தார்.
தமது உடலில் வேல்களைக் குத்திக்கொண்டும் தேசியக் கொடியை ஏந்தியவாறும் போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.
நாடாளுமன்ற வீதிக்குள் பிரவேசிக்கும் இடத்தில் பொலிஸார் சத்தியேந்திராவுடன் கலந்துரையாடினர்.
இதனையடுத்து, சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்திற்கு சென்ற சத்தியேந்திராவிடம் அங்கிருந்த அதிகாரியொருவர் மனுவை ஏற்றுக்கொண்டார்.
தோட்டத்தொழிலாளர்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் 1000 ரூபாய் சம்பளம் வழங்கி இப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.