வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
புலத்சிங்கல, தெல்மல்ல பகுதியில் சட்டவிரோத வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை குற்றபுலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 43 வயதுடைய கவரகிரிய , அயகம பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதுடன், அவரிடமிருந்து சட்டவிரோத வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.