மாற்றுத்திறனாளி பெண்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்!

மாற்றுத்திறனாளி பெண்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்!

இலங்கையில் மாற்றுத்திறனாளி பெண்களும், சிறுமிகளும் பல்வேறு மட்டங்களில் ஒதுக்கப்படல், பாரபட்சம், துஷ்பிரயோகம் உள்ளிட்டவற்றை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் மகளிருக்கான அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ரமயா சல்காதோ இதனைத் தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி, அனைத்து வயதுப் பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளி ஆண்களைவிட, மாற்றுத்திறனாளி பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

எனினும், இலங்கையில் மாற்றுத்திறனுடைய தொழிலில் உள்ளவர்களின் 15 வீதமானவர்கள் மாத்திரமே பெண்கள் என கூறப்படுகின்றது.

இந்த நிலையானது, சந்தர்ப்பங்களை அணுகுவதிலுள்ள பாரிய இடைவெளியை குறிப்பதாக ஐக்கிய நாடுகளின் மகளிருக்கான அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ரமயா சல்காதோ தெரிவித்துள்ளார்.

Copyright © 8350 Mukadu · All rights reserved · designed by Speed IT net