மாகந்துரே மதுஷின் சட்டரீதியற்ற மனைவியின் கார் பறிமுதல்!
பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய புள்ளியான மாகந்துரே மதுஷின் சட்டரீதியற்ற மனைவியுடையதென கூறப்படும் காரொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பாதுக்கை, போரகெதர பகுதியிலுள்ள வீடொன்றில் குறித்த கார் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனடிப்படையில் அவ்வீட்டிற்கு சென்ற பொலிஸார், மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த காரினை இன்று (சனிக்கிழமை) மீட்டுள்ளனர்.
மேலும் அக்காரினை சோதனை செய்தபோது, அதில் எந்ததொரு அனுமதி பத்திரங்களும் இருக்கவில்லை எனவும் காரை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.