ஜனாதிபதி தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக என்னால் போட்டியிட முடியாது!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் துரதிஷ்டவசமாக என்னால் போட்டியிட முடியாது என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ, சிறந்த வேட்பாளரை தேடவேண்டும் எனவும் அந்த வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னர் நான் அரசமைப்பில் மாற்றங்களை கொண்டுவருவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ பெங்களுரில் இந்து நாளிதழிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அந்த செவ்வியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பின்வருமாறு பதிலளித்துள்ளார்.
கேள்வி- இந்தியா தீவிரபங்களிப்பு செய்யவேண்டும் என்ற விடயம் இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரின் உணர்வுகளில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தியது
பதில்-சிங்களவர்களிற்கு முதல் தமிழ் சமூகத்தவர்களே இந்திய அமைதிப்படையினரை எதிர்த்தனர்.அவர்களே முதலில் பிரச்சினையை எதிர்கொண்டமையே இதற்கு காரணம். அதன் பின்னர் எங்கள் இரு நாடுகளிற்கு மத்தியிலான பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டது.
கேள்வி- யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்து உட்கட்டமைப்பை உருவாக்கிய பெருமை உங்களையே சாரும் என குறிப்பிடுகின்றனர்- தமிழ் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்படவேண்டிய சில சந்தேகங்கள் உள்ளனவே?
பதில்- மக்களை திருப்தியடையச் செய்யலாம், ஆனால் அரசியல்வாதிகள் திருப்தியடையமாட்டார்கள் அதுவே எனது பிரச்சினை என்றார்.