இலங்கையின் போர்க்குற்ற விவகாரம்! அமெரிக்காவுக்கு பதிலாக களமிறங்கும் கனடா!
ஐ.நா மனிதஉரிமைகள் சபையில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விவகாரங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க கனடா, ஜேர்மன் நாடுகள் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் சபையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில், இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஜெனீவா யோசனையை முன்னோக்கி கொண்டு செல்ல கனடா மற்றும் ஜேர்மன் முன் வந்துள்ளது.
இந்தத் தகவலை ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் இரகசியமான முறையில் பிரித்தானியா தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை திட்டமிடப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் யோசனை ஒன்று எதிர்வரும் 25ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பிக்கும் மனித உரிமை மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டாளர்கள் மேற்குலக நாடுகளின் தூதரக அதிகாரிகளுடன் பல இரகசிய கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.