இலங்கையில் சிறுவர்களை நெகிழ வைத்த அவுஸ்திரேலிய தம்பதி!
கடந்த வருடம் முதல் முறையாக இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய தம்பதியினர் நெகிழ வைக்கும் செயல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் வறுமையிலுள்ள சிறுவர்கள், நெருக்கடியான நிலையில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டதனை அவதானித்த அவுஸ்திரேலிய தம்பதியினர் அவர்களுக்கு உதவி செய்யத் தீர்மானித்துள்ளனர்.
Aaron Dragwidge மற்றும் அவரது மனைவி Kerry Dragwidge இணைந்து இலங்கை சிறுவர்களுக்காக 1403 சோடி சப்பாத்துக்களும் 200 விளையாட்டு உபகரணங்களும் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த வருடம் இலங்கை வந்த தம்பதி, இலங்கை சிறுவர்களின் நெருக்கடி நிலைமை பார்த்து மிகவும் வருத்தமடைந்த நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.
இலங்கை சிறுவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில், அவுஸ்திரேலியல் நிதி திரட்டும் நடவடிக்கையில் குறித்த தம்பதியினர் ஈடுபட்டனர்.
அதன்மூலம் பெறப்பட்ட நிதியில் சிறுவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்துள்ளனர்.
அதனை இலங்கையிலுள்ள வறுமையான சிறுவர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளனர்.
எதிர்வரும் காலங்களிலும் இலங்கை சிறுவர்களுக்கு தாங்கள் உதவுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.