பொலிஸ் அதிகாரியை கொடூரமாக தாக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்!
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பொலிஸ் அதிகாரி மீது மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்கப்பபட்ட பொலிஸ் அதிகாரி பொலிஸ் போதைப்பொருள் பிரிவு அதிகாரி என குறிப்பிடப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் போது ஏற்பட்ட வாய்த்தகராறின் பின்னர் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.