கொழும்பிலுள்ள உணவகங்களில் உணவு உட்கொள்வோருக்கு எச்சரிக்கை!
கொழும்பில் பிரபல உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் காணப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு சிட்டி சென்டரில் அமைந்துள்ள Food Studio உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் நிறைந்து காணப்பட்டுள்ளன.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காணொளியில் உள்ள உணவு தங்கள் உணவகத்தினால் கடந்த 10ஆம் திகதி வழங்கப்பட்டதாக Food Studio உணவகம் அறிக்கை மூலம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து அங்கிருந்து உணவு வழங்கிய நிறுவனம் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் குடிநீரில் அதிக சுகாதார தன்மை குறித்து தொடர்ந்து அவதானமாக இருக்கும் Food Studio உணவகம் இவ்வாறான சம்பவம் மீண்டும் ஏற்படாமல் அவதானமாக செயற்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
எப்படியிருப்பினும் கொழும்பில் உள்ள உணவகங்களில் தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள உணவகங்களில் உணவு உட்கொள்வோருக்கு எச்சரிக்கை! http:// https://dai.ly/x72bkut