கைக்குள் மறைத்து கொள்ள கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
இத்தாலியில் தயாரிக்கப்பட்ட கைக்குள் மறைத்து கொள்ள கூடிய சிறிய ரக கைத்துப்பாக்கியுடன் நபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை, ஹிங்குரக்கொட பொலிஸ் பிரிவில் பிங்பார என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் வைத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹிங்குரக்கொட பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான நபரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சிறிய ரக கைத்துப்பாக்கிக்கு மேலதிகமாக ரவைக்கூடு, தோட்டக்கள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் இன்று ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். சம்பவம் குறித்து ஹிங்குரக்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.