ஜனாதிபதி, பிரதமரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இலங்கை கிரிக்கெட் அணி!
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி த்ரில் வெற்றியை பதிவு செய்தது.
தொடர் தோல்வியை பெற்று வந்த இலங்கை அணி, வெளிநாடு ஒன்றில் வைத்து முதல் வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் தொடர் தோல்வியை முடிவுக்கு கொண்டுள்ளது.
இலங்கை அணியின் வெற்றி குறித்து ஜனாதிபதி, பிரதமர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது டுவிட்டர் பக்கங்களில் இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இலங்கை அணி மற்றும் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றியை உறுதி செய்த குசல் ஜனித் பெரேராவுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெற்ற தோல்விகளை நிறைவு செய்து, பெற்றுக் கொண்ட வெற்றி தொடர்பில் முழு இலங்கையும் மகிழ்ச்சி அடைவதாகவும், குசல் ஜனித் பெரேரா தாய் நாட்டினை பெருமை அடைய செய்து விட்டார். தொடர்ந்தும் போராடுமாறு ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குசல் ஜனித் பெரேரா மற்றும் அணியினர் பெற்றுக் கொண்ட வெற்றி குறித்து மகிழ்ச்சியடைவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டேபன் மைதானத்தில் நேற்று நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காது 153 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.