அதிகாலையில் கோர விபத்து – 4 பேர் பலி! பலர் ஆபத்தான நிலையில்..
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹவெவ, சிலாபம் பகுதியில் வைத்து பேருந்து மின்மாற்றி ஒன்றில் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்தின் சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
8 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் பேருந்தில் சிக்கியுளளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.