கற்றனில் நடத்தப்பட்ட பாரிய மலையக மக்களின் ஆர்ப்பாட்டம்!
தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை வேதனத்தை உயர்த்தக்கோரி தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் சிறீலங்காவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் வழங்க ஒப்புக்கொள்ளபட்ட 750ரூபாயும் பின்பு அதற்கு மேலதிகமாக ஒப்புக்கொள்ளப்பட்ட 140 ரூபாவும் மலையக மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என 1000ரூபாய் இயக்கம் தெரிவித்துள்ளது
இத்தகைய பின்னணில் ஆயிரம் ரூபாய் இயக்கத்துடன் இணைந்து 30க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் மதகுருமார்கள் என என பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கற்றனில் நடத்தப்பட்டுள்ளது.
கற்றன் மல்லியப்பு சந்தியில் இருந்து கற்றன் நகரம் வரை இந்த ஆர்ப்பாட்டம் சென்றுள்ளது.