நானும் ஒரு தாய்தான் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வேதனை தெரியும்.

நானும் ஒரு தாய்தான் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வேதனை தெரியும் – சந்திரிகா அம்மையார் தெரிவிப்பு

நானும் இரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாய்தான். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி – வேதனை எனக்குத் தெரியும். அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது ஆட்சியிலுள்ள அரசின் கடமை.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-

“இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பல தடவைகள் வடக்குக்குச் சென்றுள்ளேன். அந்த மக்களின் உள்ளக் குமுறல்களை நேரில் பார்த்துள்ளேன்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்று பல இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களிலும் பேசியுள்ளேன்.

உறவுகளைத் தொலைத்தவர்களின் போராட்டம் நீதியானது – நியாயமானது. அதனை நாங்கள் கொச்சைப்படுத்த முடியாது. நானும் இரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாய்தான்.

பிள்ளைகளைத் தேடும் அந்தத் தாய்மாரின் வலி – வேதனை எனக்கும் தெரியும். அவர்களுடைய கேள்விகளுக்கு விடையளிக்கவேண்டியது ஆட்சியிலுள்ள அரசுகளின் கடமை.

இந்த விவகாரத்தை இழுத்தடிக்க முடியாது. காணாமல் ஆக்கப்பட்டோரின் பணியகம் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்” என்றார்.

Copyright © 7131 Mukadu · All rights reserved · designed by Speed IT net