தமிழின வரலாற்றில் முக்கிய மைல்கல்லின் நாயகர்களான வான்கரும்புலிகள் கேணல் ரூபன் லெப்கேணல் சிரித்திரனின் 10ம் ஆண்டு நினைவு இன்று.
இன்று எமது தமிழினத்தின் வரலாற்றில் முக்கியமான நாள் பத்து ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் இரவு உலகையே வியக்க வைத்த வான்புலிகளின் உருவாக்கத்தின் முதன்மை நாயகர்களாக தங்களை அர்ப்பணித்து பலம் சேர்த்திருந்து சிறீலங்கா அரசுக்கு பேரதிர்ச்சியை வானில் விமானத்துடன் வான் புலிகளாய் தோன்றிய வான் கரும்புலி கேணல் ரூபன் வான்கரும்புலி லெப்கேணல் சிரித்திரன் ஆகியோர் வீரச்சாவடைந்த நாள்
அவர்கள் வீரச்சாவடைந்த பொழுதுகள் முக்கியமானவை சிறீலங்கா அரசாங்கமும் ஏனைய வல்லாதிக்கங்களும் இணைந்து தமிழர்களை முள்ளிவாய்க்கால் நோக்கிய கொலைக்களத்திற்கு தள்ளிக்கொண்டு சென்ற பெரும்போர் நடந்த வேளையில் இந்த இரண்டு வான்கரும்புலிகளும் தலைவனின் நம்பிக்கைக்கு தோள்கொடுத்து தலைவர் பிரபாகரனின் நாக அஸ்திரமாக வானேறி சிறீலங்காவின் தலைநகருக்குள் புகுந்து சிங்கள தேசத்தை நிலைகுலையவைத்திருந்தனர்.
எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் புலிகளின் மகிச்சிறந்த ஆயுதம் எதுவெனில் அது அவர்களின் மனோபலம்.
அந்த மனோபலத்தின் உச்சங்களாக இந்த இரண்டு வான்கரும்புலிகளும் இதே நாள் தாயக மண்ணில் இருந்து சென்று பகைவன் கோட்டைக்குள் முழங்கி தம்மை தாயகவிடுதலைக்காய் அர்ப்பணித்தனர்.