இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு டன் பீடி இலைகளுடன் கடத்தல்கார்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலைகள் கடத்தப்படுவதாக இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சங்குமால் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது கடற்கரைபகுதியில் சந்தேகத்திற்க்கு இடமாக நின்று கொண்டிருந்த தூத்துக்குடி பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரையும் சோதனை செய்த போது அவர்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு டன் எடை கொண்ட பீடி இலைகள் வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து பீடி இலைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில் முக்கிய குற்றவாளி தூத்துக்குடியில் இருப்பது தெரிய வந்ததையடுத்து அவரை பிடிக்க சுங்கத்துறை அதிகாரிகள் தூத்துக்குடி சென்றுள்ளனர்




