போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்.

போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்.

தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ஆரம்பிக்கட்டு இரண்டு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், தீர்வு ஏதும் கிடைக்கவில்லையென மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தமது போராட்ட வடிவத்தை மாற்றவுள்ளதாக கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிடுகின்றனர்.

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கேப்பாவுலவு மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரும், கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் எதிர்வரும் 2 ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றது. எனவே வலுப்படுத்தும் விதமாக தமது போராட்டத்தை புதிய வடிவில் நடத்தவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த போராட்டம் ஆரம்பமாகி 2 வருடங்கள் பூர்த்தியாகும் நாளில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Copyright © 7116 Mukadu · All rights reserved · designed by Speed IT net