வட மாகாணத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்படுவது ஏன்?
வட மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட மாட்டார் என ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்கதை அடிப்படையாக கொண்டு செயற்படுவன் என்ற வகையில் அனைத்து இனங்களை உள்வாங்கி செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் பேசும் முஸ்லிம் சமூகம், யாழ்ப்பாணத்தின் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
வட மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களை சந்தித்து உரையாடி உள்ளேன். இனி வரும் காலங்களில் அவர்களின் பிரச்சனைகளை வரிசைப்படுத்தி அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வட மாகாணம் ஜனநாயகத்திற்கு போராடிய மாகாணம். ஜனநாயகத்தை கேட்கும் மாகாணம். அதற்காக உயிர் கொடுத்த மாகாணம். இங்கு தான் ஜனநாயகம் உயிர் பெறுகிறது என வட மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.
அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேரடி செவ்வியில் இந்த விடயங்களை வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.