கோத்தபாயவை பிரபாகரனாக சித்தரிப்பதை ரணில் நிறுத்த வேண்டும்!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை பிரபாகரனாக சித்தரிப்பதை பிரதமர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் பயங்கரவாத யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவராமல் இருந்திருந்தால் இன்று பிரதமர் வடக்கிற்கு சுதந்திரமாக பயணித்திருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய நிதியினை கொள்ளையடித்தவர்களை தம்வசம் வைத்துக் கொண்டு ஹிட்லர் ஆட்சியினை முன்னெடுக்கும் அரசாங்கம் ஜனநாயகம் பற்றி கருத்துரைப்பது வேடிக்கையானது.
தெற்கில் சிங்கள பிரபாகரனை உருவாக்க இடமளிக்க முடியாது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளமை அவர்களின் பலவீனத்தன்மையை வெளிப்படுத்துவதாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.