மன்னார் நீதவானுக்கு கொலை மிரட்டல் ; இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!
மன்னார் நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூதூர் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களை எதிர் வரும் 14 நாட்களுக்கு விளக்கமறிலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று (26) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இருவர் மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று திங்கட்கிழமை (25) சென்ற நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளரிடம் சென்று தாம் திருகோணமலை மூதூர் நீதவான் நீதி மன்றத்தில் இருந்து வந்துள்ளதாக தெரிவித்ததோடு போலி ஆவணங்களை சமர்ப்பித்து தாம் மன்னார் நீதிபதியை சந்திக்க வந்துள்ளதாக கோரி மன்னார் நீதவான் ரீ.சரவணராஜாவின் மெய்ப்பாதுகாலருடன் உரையாடியுள்ளனர்.
இதன் போது குறித்த இரு நபர்களும் மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா வின் மெய்ப்பாதுகாலருடன் கதைத்துள்ளதோடு, நீதவானுக்கு கொலை அச்சுரூத்தல் விடுக்கும் வகையில் உரையாடியுள்ளனர்.
குறிப்பாக குறித்த இரு சந்தேக நபர்களும் தமக்கும் நீதவானுக்கும் நற்பு ரீதியான உறவு உள்ளதாக கூறியுள்ளதோடு, நீதிச் சேவை ஆணைக் குழுவினால் ஏற்கனவே வழங்கப்பட்ட ஆவணங்களையும், அடையாள அட்டையையும் பயண்படுத்தி மன்னார் நீதி மன்றத்தின் பதிவாளரை தெடர்பு கொண்டதோடு, நீதவானின் மெய்ப் பாதூகவலரை சந்தித்து உரையாடியதோடு நீதவானுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் வகையில் உரையாடி மன்னார் நீதி மன்றத்தில் இருந்து குறித்த இரு நபர்களும் வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் நீதி மன்ற பொலிஸார் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை(26) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தனது தீய நடத்தையின் காரணமாக நீதிச் சேவை ஆணைக்குழுவினால் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த நபர்கள் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.