கோணாவில் பகுதியில் தாக்கப்பட்ட மாணவனை நேரில் சென்று பார்வையிட்ட பொலிஸ் குழு.
ஜனாதிபதியின் பணிக்கமைய பாடசாலைகளில் கடைப்பிடிக்கப்பட்ட தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனைபற்றி பொலீஸாருக்கு தகவல் வழங்கிய மாணவன் அச்சுறுத்தப்பட்ட பின்னர் தாக்கப்பட்ட பல்வேறு மட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
அதன் பின்னர் மாணவனின் தந்தையுடன் உரிய பொலீஸ் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி கிளிநொச்சி முல்லைத்தீ மாவட்டங்களின் பிரதி பொலீஸ் மா அதிபர் மகிந்த குணரட்ன தமக்கு கிடைத்த இரண்டு முறைப்பாடுகளில் ஒன்றுக்கு மூன்று பெண்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், மாணவன் தாக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில்
இன்று பன்னிரண்டு மணியளவில் குறித்த மாணவனின் வீட்டுக்கு விஜயம் செய்த கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரத்ன, வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன், கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்க கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனபால ஆகியோர் மாணவனுடனும் பெற்றோருடனும் கலந்துரையாடியதுடன் நிலைமைகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர் அத்துடன் மாணவனின் பாதுகாப்புக்கு தாங்கள் இருப்பதாகவும் என்ன வேண்டும் என்றாலும் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் மாணவன் பாடசாலை செல்வதற்கு தாம் துவிச்சக்கர வண்டி ஒன்றினை அன்பளிப்பு செய்வதாகவும் தெரிவித்தனர்.