சிம்பாப்வேயில் சூறாவளி: 24 பேர் உயிரிழப்பு – 40 பேரை காணவில்லை!

சிம்பாப்வேயில் சூறாவளி: 24 பேர் உயிரிழப்பு – 40 பேரை காணவில்லை!

சிம்பாப்வேயின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட சூறாவளியில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு தகவல் அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் அதிகளவானோர் சிமணிமணி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதேவேளை காணாமல் போனோரில் இருவர் மாணவர்கள் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சிம்பாப்வேயில் கடந்த 2000ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியின் அழிவு வடுக்கள் இன்னும் மாறாத நிலையில் மீண்டும் ஒரு பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மொசாம்பிக்கின் எல்லைப் பகுதியான சிமணிமணி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பயிர்கள் உட்பட பாரியளவான பகுதி அழிவடைந்துள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சாக்கோ தெரிவித்துள்ளார்.

‘இடை’ என பெயரிடப்பட்டுள்ள குறித்த சூறாவளி, ஆபிரிக்க நாடுகளான மொசாம்பிக், மலாவி மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளைப் பாதித்துள்ளது.

இவ்வாண்டு ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தில் உலகம் முழுவதிலும் உள்ள 5 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net