துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் பலி.
பெலியத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெலியத்த பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் உயிரிழந்துள்ளார்.
அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (வெள்ளிக்கிழமை) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.