வடக்கிலிருந்து வைத்தியர்களை குறைக்க முயலும் வைத்தியர் சங்கம்!
யாழ்.மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் வைத்தியர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் தொடர்ச்சியாக 3ஆவது வைத்தியரை யாழ். மாவட்டத்தை விட்டு வெளியேற்ற வைத்திய சங்கம் முயன்றுள்ளதாக யாழ்.வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் வைத்தியர்களினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நெடுந்தீவு, மருதங்கேணி போன்ற வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் இல்லாத நிலையிலும், தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவும் நிலையிலும் வைத்தியர் சங்கம் யாழ்.மக்களை பாதிக்கும் வகையில் நடந்து கொள்கிறது.
சங்கம் வைத்தியர் உமாசுதனை வெளியேற்ற முயன்று தோல்வியுற்றது. குருநகர் வைத்தியசாலை பெண் வைத்தியரை கொழும்புக்கு அனுப்ப முற்பட்டு தேல்வியை தழுவியது.
தற்போது வரணி வைத்தியசாலையில் திறம்பட செயற்பட்டு வந்த வைத்தியரை கொழும்புக்கு அனுப்பி தனது விசுவாசத்தினை காட்டியுள்ளது.
மேலதிக பெண் சுகாதார வைத்திய அதிகாரி பதிலீடின்றி உடனடியாக இடமாற்றம் செய்யப்படக் கூடிய நிலையில் யாழ்.வைத்திய சங்கத்தினால் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.