ரயில் தண்டவாளத்திலிருந்து சடலம் மீட்பு.

ரயில் தண்டவாளத்திலிருந்து சடலம் மீட்பு.

கொழும்பு – புத்தளம் பிரதேசங்களுக்கிடையிலான மற்றும் லுனுவில – தும்மோதர ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான ரயில் தண்டவாளத்திலிருந்து நபர் ஒருவரின் சடலத்தை இன்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கிரிமெடியான பிரதேசத்தைச் சேரந்த 31 வயதுடைய நபரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் சிலாபம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net