கிளிநொச்சி பிரதேச வைத்தியசாலைகளுக்கு உலக வங்கி நிதியுதவி.

கிளிநொச்சி பிரதேச வைத்தியசாலைகளுக்கு உலக வங்கி நிதியுதவி.

உலக வங்கி நிதி உதவியுடன் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் ஆரம்ப சுகாதார சேவையினை மேம்படுத்தும் திட்டத்தினூடாக கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு அக்கராயன் மற்றும் தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் சேவையினை மேற்கொண்டு வருகின்ற இந்த வைத்தயசாலைகளில் அதிகளவான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மிக முக்கியமான இரண்டு பிரதேச வைத்தியசாலைகளாக இவை காணப்படுகின்றன.

எனவே 2019 இல் ஆரம்ப சுகாதார சேவையினை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதேச வைத்தியசாலைகளான அக்கராயன் மற்றும் தர்மபுரம் வைத்தியசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை பிரதேச மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net